இந்தியா இருபதாக உடைப்படுமென்று உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை பார்த்து புழுக்களை உண்டு வாழும் சீன தேசத்தவன் சொல்கிறான். அவனுக்கென்ன தெரியும் இந்திய பேரரசின் வளம் என்ன என்பது பற்றி.. என்று கூறுகிறீர்களா..? சுமார் 5120 கி.மீ நீளமுள்ள இந்த பாரத தேசத்தில் பல வளங்கள் கொட்டிக்கிடக்கிறது எனவே நாம் வருங்கால வல்லரசு என்கிறீர்களா..?
பாரதம் வளம்மிக்க நாடு, அதிலும் இயற்கை வளமும்,மனித வளமும் நிறைந்த நாடாக உலக அளவில் அடையாளம் காணப்படும் நாடு.ஆனால் என்ன ? நம்மவர்களுக்கு புத்தி தான் கொஞ்சம் சரியில்லை..? என்னடா.? இவன் லூசுமாக்கான் மாதிரி பேசறான் என்று நினைக்கிறீர்களா..?
அட, அப்புறம் என்னங்க...சும்மா தொட்டதுக்கெல்லாம் ,அழுகுநிஆட்டம் ஆடுறாங்க. முதல்ல ஜாதி, மதம், என்ற பிரிவினைகள் மாதிரி இப்போ நாட்டுக்கு அடுத்த அச்சுறுத்தல் மாநிலங்களுக்கிடையிலான இனப்பிரிவினை வேறு.
கன்னடத்துக்காரன் காவிரில தண்ணி விட முடியாதுன்கிறான்,கேரளத்தவன் பெரியாத்துல பிரச்சினை பண்றான்.,வடக்க இருந்து இங்க வந்தவன நம்மாளுக "பருப்பு விற்க வந்துட்டான்வ"நு சொல்லி வேறுப்பேத்துறான்.அட என்னதாம்ப்பா நடக்குது இங்க.
மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாங்கற பேர கூட நம்மாளுக கிரிக்கட் வெளயாடும்போது மட்டும் தான் சொல்றாங்க.மத்தபடி எப்பபார்த்தாலும் சண்டை ,சுயநலம் ,? எங்க மாநிலத்துக்கு மத்திய அரசு எதுவுமே கொடுக்கலநு புலம்பல் ?அரசியல் வாதிகளின் சதுரங்கத்தில் சாமானியன் பகடைக்காய்.
உலகத்துக்கந்தப்பக்கம் இருக்கற வெள்ளைக்காரனோட மொழிய நாம கத்துக்கலாம் ஆனா இந்த தேசிய மொழி இந்தி கத்துக்க கூடாது. இந்தியை ஒழித்தவர்களின் வாரிசுகள் எத்தனை பேர் இந்தி படிக்கல? எல்லாருக்கும் தெரியும் ,பாமரன ஒன்னு சேர்த்து ஒட்டு போட வைக்க ஒருநாடகம்.ஒரு தேசத்தில் ஒரு மாநிலத்துக்கு தேசிய மொழி எதிரி. சரி இந்தி திணிப்பு, தமிழை அழித்துவிடும் என்றவர்களுக்கு ஆங்கிலத்தின் ஆக்கிரமிப்பு ஏன் தெரியவில்லை ?
இதனால வடக்க பொழப்பு தேடி போன மதராசி நு சொல்லி அவமானப்படுத்தறான்.கேரளா பக்கம் போனா பாண்டிப்பயளுவ என்று பட்டப்பெயர்.அட இனத்தையும் மொழியையும் காக்க நினைப்பவர்களே !உங்களுக்கு இந்த நாட்டின் மீது ஏன் பற்று வர மாட்டேங்குது.இந்தியன் என்ன ஆனான் ..?கொஞ்சம் தேடிப்பிடிங்கப்பா...?ஒட்டு மொத்த மாநில மக்களும் ஒன்று பட்டு நின்னா இந்த பிரச்சினை இல்லை.பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள், பலசாதிகள் இருந்தாலும் நாங்கள் இந்தியர்கள் என்று வாயபிசெகம் செய்ய மட்டும் குறைச்சல் இல்லை....!
பதிவுலகுக்கு வாருங்கள், வாழ்த்துகள்!
ReplyDeleteஇந்தியன் என்பது ஒரு வகையான ஆதிக்க திணிப்பு என்பது எல்லா மாநிலத்துக்காரனுக்கும் புரிந்து விட்டது என்பது, தமிழனுக்கு தான் இன்னும் புரியவில்லை. தமிழன் தான் திரையரங்கிலும், குடியரங்கிலும்(மதுபான பார்கள்) மயங்கி கிடக்கிறானே. மற்ற படி தேசியத்தின் பெயரில் கொள்ளையடிப்பவர்களை பற்றி தங்களுக்கு தெளிவில்லை என்று நினைக்கிறேன். இல்லையெனில் தாங்கள் இப்படி எழுதி இருக்க வாய்ப்பு இல்லை.
ReplyDelete//பொற்கோ said...
ReplyDeleteஇந்தியன் என்பது ஒரு வகையான ஆதிக்க திணிப்பு என்பது எல்லா மாநிலத்துக்காரனுக்கும் புரிந்து விட்டது என்பது, தமிழனுக்கு தான் இன்னும் புரியவில்லை. தமிழன் தான் திரையரங்கிலும், குடியரங்கிலும்(மதுபான பார்கள்) மயங்கி கிடக்கிறானே. மற்ற படி தேசியத்தின் பெயரில் கொள்ளையடிப்பவர்களை பற்றி தங்களுக்கு தெளிவில்லை என்று நினைக்கிறேன். இல்லையெனில் தாங்கள் இப்படி எழுதி இருக்க வாய்ப்பு இல்லை.//
வாங்க ,வருகைக்கு நன்றி...!
சாமானிய மனிதன் அத்தனை பேரும் நாங்கள் இந்தியர்கள் என்று தான் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் .மொழி ,இன வெறியை தூண்டி அதன் மூலம் பிழைப்பு நடத்திவரும் வெறியர்கள் கூட்டம் தான் பிரிவினையை வற்புறுத்துகிறது.தேசியத்தின் பெயரை சொல்லி கொள்ளையடிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்., ஆனால் அதே வேளையில் மொழி, இனங்களின் பெயரால் கொள்ளையடிக்கும் மாநில கொள்ளையர்கள் தங்களுக்கு தெரியாதோ...?
தமிழ் பற்றுடையான் என்று பீற்றிக்கொண்டு மக்கள் மனதில் மாயையை உருவாக்கி விட்டு ,தங்கள் வாரிசுகளை தமிழ் என்றால் என்ன எண்டு கூட தெரியாத அளவுக்கு வளர்க்கும் தானைத்தளைவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்.
இந்தியன என்பது ஆதிக்க திணிப்பு என்றால் ,உங்கள் தமிழின தலைவர்கள் எத்தனை பேர் சமத்துவ சமுதாயத்தைச் நிலை நிறுத்தியிருக்கிறீர்கள் , சாதி பேரை சொல்லி ஒட்டு வாங்குவது.தமிழ் வெறியை தூண்டி இந்த மக்களை வேறு எதுவும் கற்றுக்கொள்ள விடாத அளவுக்கு முடக்குவது...
இன்னும் எத்தனையோ சொல்லலாம். கொஞ்சமாவது சொந்தமாக சிந்தித்து ஆராய்ந்து பாருங்கள் .
கொள்கை எதுவும் இல்லாதவனால் மட்டுமே சமத்துவ சமுதாய காண முடியும்,
பார்ப்பனிய எதிர்ப்பாலனால் தாழ்த்தப்பட்டவனையும்,அவன் பேரை சொல்லி பிழைப்பு நடத்துபவனையும் சமாதானப்படுத்தமட்டுமே முடியும்.
அதே போல தமிழ் ஒழிக்க நினைப்பவனால் ,பார்ப்பனீய கூட்டத்தையும்,அவன் பேரை சொல்லி பிழைப்பு நடத்துபவனையும் சமாதானப்படுத்தமட்டுமே முடியும்
உங்களாலும் என்னாலும் தான் ஆக்கபூர்வ சிந்தனையை வெளிப்படுத்தி மாற்றத்தை உருவாக்க முடியம்
எந்த வீட்டுல கிளருனாலும் நாறும்..
கொள்கைவாதிகள் என சொல்லும் சந்தர்ப்பவாதிகள் வலைகளில் வீழ்ந்து விடாதீர்கள் ...அது எதை பற்றி பேசினாலும் சரி...