உலகமே பதைபதைக்கும் அளவுக்கு இன ஒழிப்புக்கொடுமை நடந்த போது,இந்தியா வாய் மூடி மவுனம் சாதித்தது.
ஆனால் மேற்கத்திய நாடுகள் அவ்வப்போது குரல் உயர்த்தின. ஆனால் வல்லரசு சீன தேசமும்,வளரு அரசு இந்திய தேச அரசியல் துரோகிகளும் தமிழனை அழிப்பதற்கு துணை நின்றனர்.தட்டிக்கேட்ட மேற்கத்திய மனிதர்களின் வாயை அடைத்தனர்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறலை கண்டிக்கும் வகையில் ஐரொப்பிய யூனியன் நாடுகள் வழங்கிவந்த வர்த்தக சலுகை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போதும், அதற்குப்பின்பும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் காரணமாக 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இடம் பெயர்ந்தோர் சுமார் 3.5லட்சம் பேர் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் இலங்கையில் மனித உரிமைகளுக்கு மதிப்பில்லை என்ற நிலை தொடர்கிறது. பல முறை எச்சரித்தும், அறிவுறுத்தியும் கூட இலங்கை அரசு தனதுபோக்கை மாற்றிக்கொள்ளவில்லை
எனவே இலங்கை தயாரிப்பு பொருட்களை இறக்குமதி செய்ய அந்நாட்டுக்கு அளிக்கப்பட்டுவந்த 6சதவீதம் வர்த்தக சலுகையை ஐரோப்பிய நாடுகள் ரத்து செய்கிறது என ஐரோப்பிய யூனியன்; கூட்டமைப்பு நாடுகள் அறிவித்துள்ளது.
இந்த செய்தி வெளிவந்த அதே நாளேடுகளில் ,இலங்கைக்கு இந்திய அரசு மேலும் ஐந்நூறு கோடி வழங்க உள்ளதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.
பல நாடுகள் வற்புறுத்திய போதும் , மனிதர்கள் மேல் கோரதாண்டவம் ஆடிய இலங்கை அரசை இந்தியா தட்டிக்கொடுத்ததை யாரும் மறக்க முடியாது.
கண் துடைப்பிற்காக அங்கு சென்ற பிரணாப் முகர்ஜீ போர் நிறுத்தம் வேண்டி ராஜபத்செயை சந்தித்தாக செய்திகள் இந்தியாவில் வெளியானது.
ஆனால் இலங்கை நாளேடுகளிலோ போரை விரைந்து நடத்தி முடிக்க இந்தியா கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டது.
இந்தியாவில் செய்திகளை மட்டுப்படுத்த, இலங்கை தூதரகம் மூலமாக பத்திரிக்கைகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதையும் பெரும்பாலானவர்கள் அறிவர்.
இந்தியாவின் இலங்கை,சிங்களத்தோழமை அப்பட்டமாக வெளிப்படுத்தும் சம்பவம் தான் ,இந்த இரண்டாவது கட்ட நிதியுதவி..
எந்த நாட்டில் இப்படி நடக்கும்,காரணம் எதுவுமின்றி,தமிழன் கொட்டகைகளில் மந்தி போல அடைத்து வைக்கப்பட்டிருக்கிறான்.இதை இந்தியதமிழனால் தட்டிக்கேட்க முடியவில்லை.
இதுதான் பரவாயில்லை,
முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்திய பிறகு மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இலங்கைக்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் சென்றார்கள். அவர்கள் அறிக்கை தந்திருக்கிறார்கள். அந்த அறிக்கை குறித்தும், இலங்கை அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்தும் பேசினோம்.
இலங்கை அரசு தன்னுடைய வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றிட எப்படி அவர்களுக்கு யோசனை, அறிவுரை சொல்வது என்பதை பற்றியெல்லாம் கலந்து பேசினோம்.
டெல்லியில் நாங்கள் பேசியதை கருணாநிதியிடம் எடுத்துக்கூறினேன். முதல்-அமைச்சரிடம் பேசியதை டெல்லியில் மற்ற மந்திரியுடன், குறிப்பாக வெளியுறவுத்துறை மந்திரியிடம் நான் கூறுவேன்.
இதுவரை எங்களுக்கு வந்த தகவலின்படி இடம் பெயர்ந்த 5,000 தமிழர்கள் அவரவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு சென்றிருக்கிறார்கள்.(எதுக்குடா இந்த பச்ச பொய்) இப்பொழுதுதான் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்.
ஆரம்பம் மெதுவாகத்தான் இருக்கும்.(எல்லாரும் செத்ததுக்கப்புறம் முகாமில் இருந்தவர்களை அனுப்பிவிட்டோம்னு சங்கடப்படாம சொல்லுவானுக) போகப்போக இது வேகமடைந்து அனைத்து இடம் பெயர்ந்த தமிழர்களும் அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு மீண்டும் செல்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
ஈழத்தமிழர்களுக்கு உதவிட 500 கோடி ரூபாய் இலங்கை அரசுக்கு மத்திய அரசு ஏற்கனவே அளித்தது. மேலும் 500 கோடி ரூபாய் தருவதாக அறிவித்திருக்கிறோம் அதற்கு இன்னும் இலங்கை அரசிடமிருந்து திட்டம் வரவில்லை.(பாருங்க இவனுக சம்பாதிக்க தமிழன் பெற பயன்படுத்துறாங்க)
அந்த திட்டத்தை விரைவுபடுத்தி எங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதற்குரிய முயற்சியை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.
என்று ராஜிவ் செத்ததை சொல்லி இன அழிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் துரோகி சிதம்பரம் அறிவிக்கிறார்.இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி பச்சை பொய் பேசுவார்கள் என்ன்று தெரியவில்லை.
இவர்கள் தமிழனுக்காக இந்த ஐந்நூறு கோடியை கொடுக்கிறார்களா ? இல்லை மனித உரிமை மீறலால் மற்ற நாடுகள் இலங்கைக்கு பணம் தர மறுப்பதால் அதை ஈடுகட்ட கொடுக்கிறாரா ?
இதற்கு தமிழன தலைவர் என தண்டோரா போட்டுக்கொள்ளும் கருணாநிதி உடந்தையா?
உங்கள் வயிறு நிறைய என் தமிழன் சாக வேண்டுமா/
ராஜ பச்சே விடம் கொடுக்கும் இந்த ஐந்நூறு கோடிக்கு எத்தனை பர்சண்டேஜ் கமிஷன் பேசியிருக்கிறது இந்த ............கள் என்று தெரியவில்லை.
நம்ம ஆளுங்க கமிசன் இல்லாம எதுவுமே செய்ய மாடடானுங்க.....
ReplyDeleteதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in