Monday, October 19, 2009

ராஜபச்சே விடம் கொடுக்கும் ஐந்நூறு கோடிக்கு எத்தனை பர்சண்டேஜ் கமிஷன்

உலகமே பதைபதைக்கும் அளவுக்கு இன ஒழிப்புக்கொடுமை நடந்த போது,இந்தியா வாய் மூடி மவுனம் சாதித்தது.


ஆனால் மேற்கத்திய நாடுகள் அவ்வப்போது குரல் உயர்த்தின. ஆனால் வல்லரசு சீன தேசமும்,வளரு அரசு இந்திய தேச அரசியல் துரோகிகளும் தமிழனை அழிப்பதற்கு துணை நின்றனர்.தட்டிக்கேட்ட மேற்கத்திய மனிதர்களின் வாயை அடைத்தனர்.


இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறலை கண்டிக்கும் வகையில் ஐரொப்பிய யூனியன் நாடுகள் வழங்கிவந்த வர்த்தக சலுகை ரத்துசெய்யப்பட்டுள்ளது.


இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போதும், அதற்குப்பின்பும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் காரணமாக 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் இடம் பெயர்ந்தோர் சுமார் 3.5லட்சம் பேர் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இதன் மூலம் இலங்கையில் மனித உரிமைகளுக்கு மதிப்பில்லை என்ற நிலை தொடர்கிறது. பல முறை எச்சரித்தும், அறிவுறுத்தியும் கூட இலங்கை அரசு தனதுபோக்கை மாற்றிக்கொள்ளவில்லை


எனவே இலங்கை தயாரிப்பு பொருட்களை இறக்குமதி செய்ய அந்நாட்டுக்கு அளிக்கப்பட்டுவந்த 6சதவீதம் வர்த்தக சலுகையை ஐரோப்பிய நாடுகள் ரத்து செய்கிறது என ஐரோப்பிய யூனியன்; கூட்டமைப்பு நாடுகள் அறிவித்துள்ளது.


இந்த செய்தி வெளிவந்த அதே நாளேடுகளில் ,இலங்கைக்கு இந்திய அரசு மேலும் ஐந்நூறு கோடி வழங்க உள்ளதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.


பல நாடுகள் வற்புறுத்திய போதும் , மனிதர்கள் மேல் கோரதாண்டவம் ஆடிய இலங்கை அரசை இந்தியா தட்டிக்கொடுத்ததை யாரும் மறக்க முடியாது.


கண் துடைப்பிற்காக அங்கு சென்ற பிரணாப் முகர்ஜீ போர் நிறுத்தம் வேண்டி ராஜபத்செயை சந்தித்தாக செய்திகள் இந்தியாவில் வெளியானது.


ஆனால் இலங்கை நாளேடுகளிலோ போரை விரைந்து நடத்தி முடிக்க இந்தியா கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டது.


இந்தியாவில் செய்திகளை மட்டுப்படுத்த, இலங்கை தூதரகம் மூலமாக பத்திரிக்கைகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதையும் பெரும்பாலானவர்கள் அறிவர்.


இந்தியாவின் இலங்கை,சிங்களத்தோழமை அப்பட்டமாக வெளிப்படுத்தும் சம்பவம் தான் ,இந்த இரண்டாவது கட்ட நிதியுதவி..


எந்த நாட்டில் இப்படி நடக்கும்,காரணம் எதுவுமின்றி,தமிழன் கொட்டகைகளில் மந்தி போல அடைத்து வைக்கப்பட்டிருக்கிறான்.இதை இந்தியதமிழனால் தட்டிக்கேட்க முடியவில்லை.


இதுதான் பரவாயில்லை,
முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்திய பிறகு மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இலங்கைக்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் சென்றார்கள். அவர்கள் அறிக்கை தந்திருக்கிறார்கள். அந்த அறிக்கை குறித்தும், இலங்கை அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்தும் பேசினோம்.இலங்கை அரசு தன்னுடைய வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றிட எப்படி அவர்களுக்கு யோசனை, அறிவுரை சொல்வது என்பதை பற்றியெல்லாம் கலந்து பேசினோம்.


டெல்லியில் நாங்கள் பேசியதை கருணாநிதியிடம் எடுத்துக்கூறினேன். முதல்-அமைச்சரிடம் பேசியதை டெல்லியில் மற்ற மந்திரியுடன், குறிப்பாக வெளியுறவுத்துறை மந்திரியிடம் நான் கூறுவேன்.


இதுவரை எங்களுக்கு வந்த தகவலின்படி இடம் பெயர்ந்த 5,000 தமிழர்கள் அவரவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு சென்றிருக்கிறார்கள்.(எதுக்குடா இந்த பச்ச பொய்) இப்பொழுதுதான் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்.


ஆரம்பம் மெதுவாகத்தான் இருக்கும்.(எல்லாரும் செத்ததுக்கப்புறம் முகாமில் இருந்தவர்களை அனுப்பிவிட்டோம்னு சங்கடப்படாம சொல்லுவானுக) போகப்போக இது வேகமடைந்து அனைத்து இடம் பெயர்ந்த தமிழர்களும் அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு மீண்டும் செல்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.


ஈழத்தமிழர்களுக்கு உதவிட 500 கோடி ரூபாய் இலங்கை அரசுக்கு மத்திய அரசு ஏற்கனவே அளித்தது. மேலும் 500 கோடி ரூபாய் தருவதாக அறிவித்திருக்கிறோம் அதற்கு இன்னும் இலங்கை அரசிடமிருந்து திட்டம் வரவில்லை.(பாருங்க இவனுக சம்பாதிக்க தமிழன் பெற பயன்படுத்துறாங்க)

அந்த திட்டத்தை விரைவுபடுத்தி எங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதற்குரிய முயற்சியை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.


என்று ராஜிவ் செத்ததை சொல்லி இன அழிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் துரோகி சிதம்பரம் அறிவிக்கிறார்.இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி பச்சை பொய் பேசுவார்கள் என்ன்று தெரியவில்லை.


இவர்கள் தமிழனுக்காக இந்த ஐந்நூறு கோடியை கொடுக்கிறார்களா ? இல்லை மனித உரிமை மீறலால் மற்ற நாடுகள் இலங்கைக்கு பணம் தர மறுப்பதால் அதை ஈடுகட்ட கொடுக்கிறாரா ?


இதற்கு தமிழன தலைவர் என தண்டோரா போட்டுக்கொள்ளும் கருணாநிதி உடந்தையா?
உங்கள் வயிறு நிறைய என் தமிழன் சாக வேண்டுமா/
ராஜ பச்சே விடம் கொடுக்கும் இந்த ஐந்நூறு கோடிக்கு எத்தனை பர்சண்டேஜ் கமிஷன் பேசியிருக்கிறது இந்த ............கள் என்று தெரியவில்லை.

Friday, October 16, 2009

குருதி காயாத தேசத்தில் போய் குசலம் விசாரித்த அரசியல்வியாபாரிகள்

[Mahinda_Indian_MP13909_1.jpg]இலங்கை இந்திய கூட்டுச்சதித்திட்டத்தின் ஆலாபனைகள் தொடங்கிவிட்டன. இலங்கைக்கான ஊர்வலத்திருவிழா முடித்துவிட்டு வந்த இந்தியத் தமிழ் சட்டமன்ற உறுப்பினர்களை, மூலமூர்த்தியே நேரில் சென்று வரவேற்று கலந்துரையாடி, வழக்கமான பத்திரிக்கையாளர் மாநாடும் நடாத்திமுடித்துவிட்டார். இதனூடாக இலங்கை மக்கள் தொடர்பான தனது கரிசனையை வெளிப்படுத்திய மூலமூர்த்தியான கருணாநிதி, தன் சாதனைப்பட்டியலையும் சேர்த்தே நிரப்பியுள்ளார். 'ஊர் அழ ஊமையன் விசிலடித்தது' போல தங்களது வழமையான கூத்தை நிறைவேற்றிவிட்டது தமிழக அரசு.இவர்களது பயண அடைவின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக ஐம்பத்தியெட்டாயிரம் பேர் குடியேற்றபடுவார்கள் என்ற உறுதிமொழியை இலங்கை அதிபர் ராஜபக்ச வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 11600 குடும்பங்களே குடியமர்த்தப்படுவதாக கருத்தில் கொள்வோமாக இருந்தால் ஏற்கனவே யாழ்ப்பாணம்,வவுனியா, மன்னார், திருகோணமலை ,மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களிலிருந்து வன்னி வந்து திரும்பிபோக முடியாது அகப்பட்டுக்கொண்ட மக்களும் மேற்குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களில் உறவினர்களால் வந்து பொறுப்பேற்கக்கூடிய குடும்பங்களும் தான் இதில் உள்ளடக்கக்கூடிய வாய்ப்புள்ளதே தவிர, வன்னிப்பகுதி மக்களல்ல என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.ஜநா, ஜரோப்பிய ஒன்றியம் உட்பட பல மேற்கைத்தேய நாடுகளும் மனிதஉரிமை அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் மக்கள் குடியேற்றம் தொடர்பாக தொடர்ந்து அழுத்தங்களை கொடுத்த வண்ணமுள்ளனர். அதேவேளை ஜீ.பி.எஸ் வரிச்சலுகை விடயத்தில் மேற்கைத்தேய நாடுகளின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கும் இலங்கை அரசு, தற்போது இந்தியாவின் துணையை நாடியிருப்பதும் சந்தர்ப்பத்தை பார்த்துக்கொண்டிருந்த இந்தியாவும் வாய்ப்பை பயன்படுத்தியிருப்பதன் எதிரொலிதான் இலங்கை அதிபரின் அழைப்புக்கடிதமும் இந்திய சட்ட மன்ற உறுப்பினர்களின் திடீர் விஜயமும் ஆகும்.வவுனியாவின் முகாமிலுள்ள எனது உறவினருடன் கதைக்கும்போது, இந்திய சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்தீர்களா? உங்களுடன் கதைத்தார்களா? பார்த்தார்களா? என வினாவினேன். அதற்கு அவர் முகாமிலுள்ள பாடசாலையில் இறங்கிவிட்டுப் போனார்களாம், எங்களை போகவிடவில்லை ஏற்கனவே ஆசிரியர்கள் குறிப்பிட்ட பொதுமக்களை தயார்ப்படுத்தி வைத்திருந்தனர் அவர்களுடனேயே பேசிவிட்டுச் சென்றனர்' என்றார். 'கெலிகொப்டர் மேலால் பறந்து போச்சுது, நாங்கள் அண்ணாந்து பாத்துக் கொண்டு நின்றம் அவ்வளவுதான்' என்ற அவரது விரக்தியான பதிலில் அங்கு நடந்ததை தெளிவாக அறிய முடிந்தது. குறுகிய நேரத்திற்குள் இப்படித்தான் இந்திய தமிழ் சட்டமன்ற உறுப்பினர்கள் சிறையகதிமுகாம்களில் காட்சியளித்துள்ளனர்.தொடர்ச்சியாக முகாம்களை கண்காணித்து வரும் மனித உரிமை ஆணையமும், பராமரித்துவரும் ஜநாவின் அமைப்புகளும் முகாம் நிலவரம் தொடர்பாக காட்டமான அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் இலங்கை அரசின் செல்லப்பிள்ளைகளாக சென்ற (செத்தவீட்டுக்குச் சென்றவனை தாரை தம்பட்டை, சிவப்புக்கம்பள விரிப்பு, மாலை மரியாதைகள் என வரவேற்க, தங்களுக்குரிய பாணியிலேயே ஏற்றுக் கொண்ட இவர்கள்தான் ஈழத்தமிழர்களிற்காக கண்ணீர் விடுவதைதவிர வேறு ஒன்றுமில்லை என்று கூறிய மூலமூர்த்தியின் அரசியல் பின்பற்றிகள்). 'உண்மை நிலமைகளை நேரில் கண்டறியும் குழுவின்' காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த சுதர்சன் நாச்சியப்பன் அவர்கள், 'போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் அனைத்துலக நியமனங்களுக்கமைவாகவே அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பிற்காகவே முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன' என்று நற்சான்றிதழ் வழங்கியுள்ளார்.(நக்கினார் நாவிழந்தார் என்பது இதைத்தானோ)ஒரு நாடு தனது பிரஜைகளை சிறையகதிமுகாமில் வைத்தருப்பதற்கு இப்படியொரு விளக்கம் கொடுத்துள்ளார். தமிழகத்தில் முகாம்களிலுள்ள ஈழத்தமிழ் அகதிகளையும் கிட்டத்தட்ட இதேபோன்று கடுமையான விதிமுறைகளுடன் கையாளும் தன்மையை ஒப்பிட்டுத்தான் அப்படிக்கூறினாரோ தெரியவில்லை.முகாம் நிலவரம் தொடர்பாக நற்சான்றிதழ் கொடுத்தது மட்டுமல்லாமல் உண்மை நிலையறியச்சென்ற குழுவின் எந்த இந்திய தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும் முகாம்களின் உண்மை நிலையை வெளிப்படுத்தவில்லை.(ஊடகத்திற்கு பேட்டிகளை வழங்கக்கூடாது என்பது இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின், இலங்கையின் அன்புக்கட்டளையோ!). மாறாக அரசாங்கத்திற்குச் சார்பான அறிக்கைகளை தயாரிப்பதிலும் தங்களின் பயணம் வெற்றிப்பயணமாக அமைந்ததாக காட்டுவதிலேயேயும்தான் அக்கறையுடன் இருக்கின்றனர். சர்வதேச அழுத்தத்தை பொருட்படுத்தாத இலங்கை, ஜீ.பி.எஸ் வரிச்சலுகை தொடர்பான சர்வதேசத்தின் எதிர்ப்பு நிலையின்மையினைக் கையாள்வதற்காகவே, திடீரென இந்திய தமிழ் சட்டமன்ற உறுப்பினர்களை வரவழைத்ததுடன் 11600 குடும்பங்களை குடியேற்றப்போவாதாக கூறியதானது இந்திய இலங்கை அரசுகளின் கூட்டு திரைமறைவு அரசியல் நகர்வின் ஆரம்பம்தான் என்பது அப்பட்டமாக வெளிவருகின்றது.'போர் நடந்த நேரத்திலெல்லாம் வேடிக்கை பார்த்து விட்டு இப்போது ஏன் வந்தீர்கள்? இந்தியா தான் போரை நடத்தியது. தமிழகம் அதனைத் தட்டிக் கேட்கவில்லை. ராஜீவ் காந்தி கொலையை மனதில் வைத்து இன்னும் எத்தனை ஆயிரம் தமிழ் உயிர்கள் பறிக்க காரணமாக இருக்கப் போகிறீர்கள்' என்று குரலெழுப்பியதனூடாக எந்த நிலையிலேயும் தனது உரிமைக்கான கோரிக்கைகளை, தனது நியாயத்தை, தனது அரசியல் அபிலாசைகள் பற்றி, எவர் முன்னும் பேச தயங்காத, தேச விடுதலை தொடர்பான நீண்ட அரசியல் பார்வையுள்ள மக்கள் சமூகம் தான் ஈழத்தமிழர்கள் என்பதை இந்தியா புரிந்துகொண்டிருக்கும். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டார்கள் என்பதால் தமிழனுக்கு எந்த தீர்வையும் திணிக்கலாம் அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எவரேனும், குறிப்பாக இந்தியக்கொள்கை வகுப்பாளர்கள் நினைப்பார்களேயானால், அவர்களுக்கு ஈழத்தமிழ் சமூகம் பாடம் புகட்டும் என்பதை நினைவுபடுத்தியுள்ளனர்.தாயாக தாகம் தீரும் வரையிலும் நீறு பூத்த நெருப்பாக அரசியல் விடுதலையை, இதயத்தில் சுமந்திருக்கும் சமூகம்தான் ஈழத்தமிழன் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர் என்பதே இங்கு புரிந்துகொள்ள வேண்டிய உண்மை.

நன்றி-ஈழப்பக்கம் -அபிஷேகா

Tuesday, October 13, 2009

பெரியாரிசம் என்னும் புது மதம்..கடவுள் பற்றி எத்தகைய நம்பிக்கையும் இல்லாமல் இருத்தல் அல்லது கடவுள் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மறுக்கும் கொள்கை இறைமறுப்பு ஆகும். வடமொழியில் இதை நாத்திகம் என்றும் ஆங்கிலத்தில் இதை ஏத்திசம் (Atheism) என்றும் குறிப்பிடுவர். சமய நம்பிக்கை போன்றே இந்த கொள்கையும் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.
தமிழ்ச் சூழலில் இறைமறுப்பு தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.


பண்டைக்காலத்தில் உலகாயுதர் இறைமறுப்பு கொள்கை உடையவர்கள். அண்மைக்காலத்தில் ஈ. வெ. ராமசாமி தோற்றுவித்து தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெற்ற சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவை இறைமறுப்பு கொள்கை உடையன.


மார்க்சிய அல்லது இடதுசாரி நிலைப்பாடுகள் உடைய பலரும் இறைமறுப்பு கொள்கை உடையவர்கள்.


கடவுள் மறுப்பு என்பது கொள்கையாக இருந்து தற்போது அரசியல் கொள்கையாக மாறிவிட்டது.பெரியார் என்கின்ற ஈரோடு ராமசாமி கூறிய கருத்துகளை பின்பற்றுபவர்கள் தங்களை பகுத்தறிவாளன் எண்டு அவர்களே அழைத்துக்கொள்ளுகிறார்கள்.


இவர்களின் வீடுகளில் இன்றும் சாமிபடங்கள் மாட்டப்பட்டிருக்கிறது.
உருவ வழிபாட்டைப்பற்றி பேசிய பெரியாரையே கடவுளாக்கி இவர்கள் புது மதமாக மதம் பிடித்து அலைகிறார்கள்.


இந்த கோஷ்டிகள் முழுமையாக இந்து வெறியர்கலாகவே அடையாளம் காண முடிகிறது.


சிறுபான்மையினருக்கு ஆதரவு அளிப்பதாக கூறி இந்து, முசுலிம் மக்களிடையே விரோதத்தை வளர்த்தெடுப்பது இவர்களின் முக்கிய கொள்கையாகி விட்டது.


மூட நம்பிக்கைகளுக்கு எதிராக இருப்பதாக கூறிக்கொள்ளும் இவர்கள் இஸ்லாமிய,கிறித்துவ மூடநம்பிக்கைகளை பற்றி பேச தொடை நடுங்குகிறார்கள்.


சாதியின் பெயரை சொல்லி புதியதாக தமது தொப்பை நிரப்ப பாடுபடுகிறார்கள்.இதற்காக ஒடுக்கப்பட்ட மக்களை வேறெதுவும் தெரியாத அளவுக்கு கண்மூடித்தனமாக இந்து மத எதிர்ப்பை போதிக்கிறார்கள் .


கடவுள் ஆண்டை என்றால் மனிதன் அடிமையா? என்று கேட்டு ஆரம்பித்த இந்த கொள்கைவாதிகள், ஈரோடு ராமசாமியை சிலை வைத்து ,மாலைபோட்டு வணங்குகிறார்கள்.அப்படியானால் ஈரோடு ராமசாமி ஆண்டையா? இவர்கள் அவருக்கு அடிமையா?


இதில் பல சிலைகள் கொவில்களுக்கருகில் வைத்து மதவாதிகளை வம்புக்கு இழுத்து வழிபாட்டு இடங்கள் அருகில் சண்டைபோடுகிறார்கள்.


அரசியல் ஓட்டுகளுக்காக இறைமறுப்பு இயக்கம் என்று கூறிக்கொள்பவர்கள் இஸ்லாமியாயவாதிகளுடன் சேர்ந்து கொண்டு சண்டைபோட்டு பொது வாழ்வின் அமைதியை சீற்குளைக்கிறார்கள்.


குறிப்பாக கிறீஸ்தவம், இஸ்லாம், யூதம்அவர்களின் சமயம் மட்டுமே உண்மையனது என்றும் மற்ற சமயங்களை நம்புவர்கள் எல்லாம் நரகத்துக்குப் போவார்கள் என்றும் கூறுகின்றன. இந்த கருத்துகளை பற்றி கடவுள் மறுப்பாளர்கள் வாய் திறப்பதில்லை .


இந்து மக்களை மட்டுமே சாடுகிறார்கள் . இது அவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் அல்ல இந்து எதிர்ப்பாளர்கள் என்பதை தோலுரித்து காட்டுகிறது.


கிறிஸ்தவ தொன்மவியலில் ஆண் இறையின் உருவாகவும், பெண் ஆணின் உருவாகவும் படைக்கப்படுகிறார்கள். அதாவது ஆணில் இருந்து இரண்டாம் பட்சமாக வடிவமைக்கப்படுகிறாள். பெண் இறையை மீறி ஆசைப்பட்டு அப்பிள் உண்டதால்தான் மனித இனமே பாவப்பட்டு இறப்பு, நோய், துன்பம் ஆகியவற்றை எதிர்கொள்ளவேண்டி வந்தது. பெண்ணை தீய நிகழ்வுக்கு இட்டு சென்றவளாக இந்த தொன்மம் சித்தரிக்கின்றது. பெண்கள் சமய குருமார்களாக வருவதை பெரும்பான்மைகிறிஸ்தவம் இன்னும் தீர்க்கமாக எதிர்க்கிறது.


ஆனால் பெரியாரிசம் இத ப்பற்றி வாய் திறப்பதாக இல்லை ,பெண்ணியம் என்று சமநிலை பேசினாலும் அதை இந்து மதத்திற்கு எதிரான ஆயுதமாக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.


இஸ்லாம் பெண்களை ஆணின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. தலபான் பெண் கல்வியை மறுத்தது புனித இஸ்லாமிக் நாடாக கருதப்படும் சவூதி அரேபியாவில் பெண்கள் தேர்தலில் ஓட்டுப் போட முடியாதுபெண்களுக்கு வேலைகள் வாய்ப்புக்கள் அரிது குறைந்த பட்சம் அவர்கள் விரும்பும் படி உடைகளும் அணிய முடியாது.


ஆனால் இங்கெல்லாம் இந்த கடவுள் மறுப்பு, பகுத்தறிவு பேசுபவர்கள் வாதம் முன்வைக்கப்படுவது இல்லை ஒரு ஆண் நான்கு மனைவிகளை வைத்திருக்க இஸ்லாம் அனுமதி தருகிறது. ஆனால் பெண் அப்படி செய்ய முடியாது. ஒரு பொண் குழந்தையின் உடலை en:Female genital cutting மூலம் சிதைக்க அனுமதிக்கின்றது[பெண்ணும் ஆணும் தனியே பேசுவதை தடுக்கிறது. ஆணும் பெண்ணும் இணைந்து வழிபாடும் கூட செய்ய முடியாது[பெண் காதல் செய்தால் சில சமயம் இஸ்லாம்பெயரால் கொலையும் செய்யப்படுகிறது (en:Honor killing).


இஸ்லாமிய பெண்கள் விருந்தினர்களை உபசரிக்க கூட மற்ற ஆண்கள் முன்னால் வராதவாறு முடக்கப்படுகிறார்கள்.


இந்த கொள்கையுடைய இசுலாமிய வாதத்தினை கடவுள் மறுப்பாளர்கள் பகிரங்கமாகவே ஆதரிக்கிறார்கள்.இதற்காக இந்து மதத்திற்கு வக்காலத்து வாங்க முடியாது.அதிலும் கீழ்க்கண்ட சீர்கேடுகள் காணப்படுகின்றன.
இந்து சமயம் பெண்கள் பல கொடுமைகளுக்கு ஆளாவதை அனுமதிக்கிறது. உடன் கட்டை ஏறுதல் முற்காலத்தில் வற்புறுத்தப்பட்டது. பெண் குழந்தை வெறுக்கப்பட்டது.[9] குழந்தைத் திருமணம் பரிந்துரைக்கப்பட்டது.[10] பெண்ணை வன்முறைக்கு உட்படுத்த அனுமதித்தது.[11] பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று ஆணித்தரமாய் கூறுகின்றது.[12]

ஆனால் தற்போதைய இரு பாலரும் பொருளீட்டும் காலகட்டத்தில் இந்து சமயத்தில் பெண்களை முடக்குவது மற்ற சமயங்களை காட்டிலும் குறைந்துள்ளது.


இறைமறுப்பு கொள்கை கொண்ட அரசுகள் பல பத்து மில்லியன் மக்களை கொலைசெய்துள்ளன. சோவியத் யூனியனியனில் 60 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பாடர்கள் (). கம்போடியாவில் 2 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் ). சீனா, வட கொரியா போன்ற நாடுகள் பாரிய மனித உரிமை மீறல்களுக்கா குற்றம்சாட்டப்பட்டுள்ளன. இந்த எல்லா நாடுகளும் சர்வதிகார ஆட்சியைக் கொண்டவை. இதுவரைக்கும் இறைமறுப்பு அரச கொள்கையாக அறிவிக்கப்பட்ட நாடுகளில் எல்லாம் சர்வதிகாரமே தோன்றியுள்ளது.


ஆத்திகம் பேசும் மதவாதிகளுக்கிடையில் இறைமறுப்பு எனும் கொள்கையை புது மதமாக கீழே உள்ளபவர்கள் வளர்த்தெடுத்து வருகிறார்கள்.
ஈ.வெ.ரா. பெரியார் சி. என். அண்ணாத்துரை மு. கருணாநிதி 'நாத்திகம்' பி. இராமசாமி 'குத்தூசி' குருசாமி எம். ஆர். ராதா பழ. நெடுமாறன் சுப. வீரபாண்டியன் கி. வீரமணி கொளத்தூர் மணி சீமான் மா. நன்னன் சத்யராஜ் கமலகாசன் பாலமுருகன்


திராவிடம் புறக்கணிக்கப்படுவதாகவும்,பார்ப்பனீயம் கோலோச்சுவதாகவும் இவர்கள் வாதம் செய்கிறார்கள். அதிகமாக பிற புத்தகங்கள் படிப்பது ,பேச்சுகளை கேட்பது போன்றவற்றின் காரணத்தினால் இந்து மதத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள் .ஆனால் இவர்கள் குறிப்பிட்ட புத்தகங்களை மட்டும் படிக்க தூண்டப்படுகிறார்கள்


ஆனால் இந்த பிரிவினர் தற்போது ,புதிய மதமாகவே அடையாளம் காணப்படுகிறார்கள்.


பெரியார் கூறிய கொள்கைகள் தனிமனித சுதந்திரத்தையும், தனித்தன்மை மேம்பாடு செய்வது பற்றியும்,அடிமைத்தளை களைவது பற்றியும் இருந்தன. ஆனால் இவர்கள் பணத்துக்காக பிழைப்பு நடத்தும் சில தலைவர்கள்(இவர்களுக்கு)ளையும் பின்பற்றுபவர்கள்.பெரியார் கூறியதை போல சுயசிந்தனை உடையவர்கள் இந்த அமைப்புகளில் குறைவு.


கடவுள் மறுப்பை சொன்னவருக்கே சிலை வைத்து ,அவரியாயே கடவுளாக்கி மாலை போடுகிறார்கள்.... பாவம் பெரியார் இப்படியெல்லாம் நடக்கும் என தெரிந்திருந்தால் இவர்களுக்கு இன்னும் கொஞ்சம் தெளிவாகவே போதனை செய்திருக்க கூடும்.

Monday, October 12, 2009

மதச்சார்பின்மை பேசும் மத வெறியர்கள் கவனத்திற்கு...1

மனிதனை பாடாய் படுத்துகிறது மதம் என்னும் மதம். கடவுளை கும்பிடுகிறேன் என்பதற்காக உருவாக்கப்பட்ட மதங்கள் இன்று பிற மத கடவுள்களை கேவலப்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்க ஆரம்பித்து விட்டன.

இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் பின்பற்றுகின்ற இந்து மதம் அதிகப்படியான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

கடவுளை தொழுபவன் சத்தமில்லாமல் அதை செய்து கொண்டிருக்க கடவுள்கள் பெயரையும், பக்தியின் பெயரையும் பயன்படுத்தி பொறுக்கி தின்பவர்கள் அதிகமாகி விட்டனர்

என்றோ இருந்த பார்ப்பன ஆதிக்கம் இன்று இந்து மதத்தை கேவலப்படுத்துகிறது.

பல அமைப்புகள் இந்து மதத்தை பார்ப்பநீயங்களின் மதமாகவே கருதி விட்டன.

எஞ்சியுள்ள மற்ற சமூக இந்துக்களை பகைத்துக்கொள்ளவும் தயாராகி விட்டார்கள்.

சிறுபான்மை மக்களின் ஆதரவை பெற நினைப்பவர்கள் சங்கடமின்றி இந்து மதத்தவர்களை பகைத்துக்கொள்ள தயாராகி விட்டார்கள்

இதையெல்லாம் எதிர்க்க இந்து மதத்தவர்களே தயாராக இல்லை. சாதியின் பெயரால் பிளவுண்டு கிடக்கிறார்கள்.

இந்துக்களை பற்றி பகிரங்கமாகவே அரசியல் கம்பெனிகள் விமர்சிக்கிறார்கள்.சாதிய அமைப்புகளின் மூலம் சமாதானப்படுத்திக்கொள்ளலாம் என்ற தைரியத்துடன்.

இந்துக்கள் இஸ்லாமியத்துக்கேதிரான வெறியர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.
மதச்சார்பற்ற அமைப்புகள் என கூறிக்கொள்ளும் கம்யுனிசம்,பெரியாரிசம், உள்பட இஸ்லாமிய ஆதரவாளர்கள்,கிறித்துவ ஆதரவாளர்கள் பெருகிவிட்டனர்.


இந்துக்கடவுள்கள் தமிழ்க்கடவுள்கள் இல்லை என பொய் சத்தியம் செய்கிறார்கள்.

இஸ்லாமியனுக்கு பாதிப்பு என்ற பெயரில் ,தேச எதிர்ப்பு எண்ணம் வளர்த்தெடுக்கப்படுகிறது.

கடவுள் மறுப்பு என்ற புதிய மதம் ( இவர்களின் வெறியை பார்க்கும் பொது அப்படித்தான் சொல்ல முடிகிறது) இந்துக்களை மேலும் எதிரியாக்குகிறது.இவர்களால் மற்ற மதத்தினரை சாட முடிவதில்லை.

தமிழ் ஆர்வம் என்ற பெயரில் மற்ற மொழிகள் கற்கும் எண்ணம் துடைத்தெடுக்கப்படுகிறது

இந்திய அரசின் சலுகைகளை பச்சையாக அனுபவித்து அதன் மூலம் முன்னேறி விட்டு ,தேசியத்தை எதிர்க்கிறார்கள்.(ஆனாலும் அரசு சலுகைகளை விடுவதில்லை )

சில சாதி மக்கள் ஒடுக்கப்படுவதாக கூறி அழுகுணி ஆட்டம் ஆடுகிறார்கள்.
இவ்வாறாக ,(இன்னமும் நிறைய இருக்கிறது) மதவெறியை அமைப்புகள் வளர்த்தெடுக்கின்றன .ஆனால் இந்து ,முசுலிம்,கிறித்துவன் என்ற வேறுபாடு மக்களிடம் இருப்பதாக அறியமுடியவில்லை


மத அமைப்புகளே ,மற்றைய மதங்களுக்கிடையில் பகையை வளர்த்தெடுக்கின்றன.

இந்துக்களை எதிர்க்க வேண்டும் என்பதைத்தவிர இவர்களுக்கு வேறு எந்த கொள்கையும் கிடையாது..

இது இப்படியிருக்க.. இஸ்லாமியத்தை துடைத்தெறியவும் ஒரு கும்பல் கிளம்பிவிட்டது.
தொடர்ந்து அலசுவோம்..
Sunday, October 4, 2009

இந்தியன் என்ன ஆனான் ..?


இந்தியா இருபதாக உடைப்படுமென்று உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை பார்த்து புழுக்களை உண்டு வாழும் சீன தேசத்தவன் சொல்கிறான். அவனுக்கென்ன தெரியும் இந்திய பேரரசின் வளம் என்ன என்பது பற்றி.. என்று கூறுகிறீர்களா..? சுமார் 5120 கி.மீ நீளமுள்ள இந்த பாரத தேசத்தில் பல வளங்கள் கொட்டிக்கிடக்கிறது எனவே நாம் வருங்கால வல்லரசு என்கிறீர்களா..?


பாரதம் வளம்மிக்க நாடு, அதிலும் இயற்கை வளமும்,மனித வளமும் நிறைந்த நாடாக உலக அளவில் அடையாளம் காணப்படும் நாடு.ஆனால் என்ன ? நம்மவர்களுக்கு புத்தி தான் கொஞ்சம் சரியில்லை..? என்னடா.? இவன் லூசுமாக்கான் மாதிரி பேசறான் என்று நினைக்கிறீர்களா..?


அட, அப்புறம் என்னங்க...சும்மா தொட்டதுக்கெல்லாம் ,அழுகுநிஆட்டம் ஆடுறாங்க. முதல்ல ஜாதி, மதம், என்ற பிரிவினைகள் மாதிரி இப்போ நாட்டுக்கு அடுத்த அச்சுறுத்தல் மாநிலங்களுக்கிடையிலான இனப்பிரிவினை வேறு.


கன்னடத்துக்காரன் காவிரில தண்ணி விட முடியாதுன்கிறான்,கேரளத்தவன் பெரியாத்துல பிரச்சினை பண்றான்.,வடக்க இருந்து இங்க வந்தவன நம்மாளுக "பருப்பு விற்க வந்துட்டான்வ"நு சொல்லி வேறுப்பேத்துறான்.அட என்னதாம்ப்பா நடக்குது இங்க.


மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாங்கற பேர கூட நம்மாளுக கிரிக்கட் வெளயாடும்போது மட்டும் தான் சொல்றாங்க.மத்தபடி எப்பபார்த்தாலும் சண்டை ,சுயநலம் ,? எங்க மாநிலத்துக்கு மத்திய அரசு எதுவுமே கொடுக்கலநு புலம்பல் ?அரசியல் வாதிகளின் சதுரங்கத்தில் சாமானியன் பகடைக்காய்.


உலகத்துக்கந்தப்பக்கம் இருக்கற வெள்ளைக்காரனோட மொழிய நாம கத்துக்கலாம் ஆனா இந்த தேசிய மொழி இந்தி கத்துக்க கூடாது. இந்தியை ஒழித்தவர்களின் வாரிசுகள் எத்தனை பேர் இந்தி படிக்கல? எல்லாருக்கும் தெரியும் ,பாமரன ஒன்னு சேர்த்து ஒட்டு போட வைக்க ஒருநாடகம்.ஒரு தேசத்தில் ஒரு மாநிலத்துக்கு தேசிய மொழி எதிரி. சரி இந்தி திணிப்பு, தமிழை அழித்துவிடும் என்றவர்களுக்கு ஆங்கிலத்தின் ஆக்கிரமிப்பு ஏன் தெரியவில்லை ?


இதனால வடக்க பொழப்பு தேடி போன மதராசி நு சொல்லி அவமானப்படுத்தறான்.கேரளா பக்கம் போனா பாண்டிப்பயளுவ என்று பட்டப்பெயர்.அட இனத்தையும் மொழியையும் காக்க நினைப்பவர்களே !உங்களுக்கு இந்த நாட்டின் மீது ஏன் பற்று வர மாட்டேங்குது.இந்தியன் என்ன ஆனான் ..?கொஞ்சம் தேடிப்பிடிங்கப்பா...?ஒட்டு மொத்த மாநில மக்களும் ஒன்று பட்டு நின்னா இந்த பிரச்சினை இல்லை.பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள், பலசாதிகள் இருந்தாலும் நாங்கள் இந்தியர்கள் என்று வாயபிசெகம் செய்ய மட்டும் குறைச்சல் இல்லை....!