Tuesday, October 13, 2009

பெரியாரிசம் என்னும் புது மதம்..கடவுள் பற்றி எத்தகைய நம்பிக்கையும் இல்லாமல் இருத்தல் அல்லது கடவுள் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மறுக்கும் கொள்கை இறைமறுப்பு ஆகும். வடமொழியில் இதை நாத்திகம் என்றும் ஆங்கிலத்தில் இதை ஏத்திசம் (Atheism) என்றும் குறிப்பிடுவர். சமய நம்பிக்கை போன்றே இந்த கொள்கையும் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.
தமிழ்ச் சூழலில் இறைமறுப்பு தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.


பண்டைக்காலத்தில் உலகாயுதர் இறைமறுப்பு கொள்கை உடையவர்கள். அண்மைக்காலத்தில் ஈ. வெ. ராமசாமி தோற்றுவித்து தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெற்ற சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவை இறைமறுப்பு கொள்கை உடையன.


மார்க்சிய அல்லது இடதுசாரி நிலைப்பாடுகள் உடைய பலரும் இறைமறுப்பு கொள்கை உடையவர்கள்.


கடவுள் மறுப்பு என்பது கொள்கையாக இருந்து தற்போது அரசியல் கொள்கையாக மாறிவிட்டது.பெரியார் என்கின்ற ஈரோடு ராமசாமி கூறிய கருத்துகளை பின்பற்றுபவர்கள் தங்களை பகுத்தறிவாளன் எண்டு அவர்களே அழைத்துக்கொள்ளுகிறார்கள்.


இவர்களின் வீடுகளில் இன்றும் சாமிபடங்கள் மாட்டப்பட்டிருக்கிறது.
உருவ வழிபாட்டைப்பற்றி பேசிய பெரியாரையே கடவுளாக்கி இவர்கள் புது மதமாக மதம் பிடித்து அலைகிறார்கள்.


இந்த கோஷ்டிகள் முழுமையாக இந்து வெறியர்கலாகவே அடையாளம் காண முடிகிறது.


சிறுபான்மையினருக்கு ஆதரவு அளிப்பதாக கூறி இந்து, முசுலிம் மக்களிடையே விரோதத்தை வளர்த்தெடுப்பது இவர்களின் முக்கிய கொள்கையாகி விட்டது.


மூட நம்பிக்கைகளுக்கு எதிராக இருப்பதாக கூறிக்கொள்ளும் இவர்கள் இஸ்லாமிய,கிறித்துவ மூடநம்பிக்கைகளை பற்றி பேச தொடை நடுங்குகிறார்கள்.


சாதியின் பெயரை சொல்லி புதியதாக தமது தொப்பை நிரப்ப பாடுபடுகிறார்கள்.இதற்காக ஒடுக்கப்பட்ட மக்களை வேறெதுவும் தெரியாத அளவுக்கு கண்மூடித்தனமாக இந்து மத எதிர்ப்பை போதிக்கிறார்கள் .


கடவுள் ஆண்டை என்றால் மனிதன் அடிமையா? என்று கேட்டு ஆரம்பித்த இந்த கொள்கைவாதிகள், ஈரோடு ராமசாமியை சிலை வைத்து ,மாலைபோட்டு வணங்குகிறார்கள்.அப்படியானால் ஈரோடு ராமசாமி ஆண்டையா? இவர்கள் அவருக்கு அடிமையா?


இதில் பல சிலைகள் கொவில்களுக்கருகில் வைத்து மதவாதிகளை வம்புக்கு இழுத்து வழிபாட்டு இடங்கள் அருகில் சண்டைபோடுகிறார்கள்.


அரசியல் ஓட்டுகளுக்காக இறைமறுப்பு இயக்கம் என்று கூறிக்கொள்பவர்கள் இஸ்லாமியாயவாதிகளுடன் சேர்ந்து கொண்டு சண்டைபோட்டு பொது வாழ்வின் அமைதியை சீற்குளைக்கிறார்கள்.


குறிப்பாக கிறீஸ்தவம், இஸ்லாம், யூதம்அவர்களின் சமயம் மட்டுமே உண்மையனது என்றும் மற்ற சமயங்களை நம்புவர்கள் எல்லாம் நரகத்துக்குப் போவார்கள் என்றும் கூறுகின்றன. இந்த கருத்துகளை பற்றி கடவுள் மறுப்பாளர்கள் வாய் திறப்பதில்லை .


இந்து மக்களை மட்டுமே சாடுகிறார்கள் . இது அவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் அல்ல இந்து எதிர்ப்பாளர்கள் என்பதை தோலுரித்து காட்டுகிறது.


கிறிஸ்தவ தொன்மவியலில் ஆண் இறையின் உருவாகவும், பெண் ஆணின் உருவாகவும் படைக்கப்படுகிறார்கள். அதாவது ஆணில் இருந்து இரண்டாம் பட்சமாக வடிவமைக்கப்படுகிறாள். பெண் இறையை மீறி ஆசைப்பட்டு அப்பிள் உண்டதால்தான் மனித இனமே பாவப்பட்டு இறப்பு, நோய், துன்பம் ஆகியவற்றை எதிர்கொள்ளவேண்டி வந்தது. பெண்ணை தீய நிகழ்வுக்கு இட்டு சென்றவளாக இந்த தொன்மம் சித்தரிக்கின்றது. பெண்கள் சமய குருமார்களாக வருவதை பெரும்பான்மைகிறிஸ்தவம் இன்னும் தீர்க்கமாக எதிர்க்கிறது.


ஆனால் பெரியாரிசம் இத ப்பற்றி வாய் திறப்பதாக இல்லை ,பெண்ணியம் என்று சமநிலை பேசினாலும் அதை இந்து மதத்திற்கு எதிரான ஆயுதமாக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.


இஸ்லாம் பெண்களை ஆணின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. தலபான் பெண் கல்வியை மறுத்தது புனித இஸ்லாமிக் நாடாக கருதப்படும் சவூதி அரேபியாவில் பெண்கள் தேர்தலில் ஓட்டுப் போட முடியாதுபெண்களுக்கு வேலைகள் வாய்ப்புக்கள் அரிது குறைந்த பட்சம் அவர்கள் விரும்பும் படி உடைகளும் அணிய முடியாது.


ஆனால் இங்கெல்லாம் இந்த கடவுள் மறுப்பு, பகுத்தறிவு பேசுபவர்கள் வாதம் முன்வைக்கப்படுவது இல்லை ஒரு ஆண் நான்கு மனைவிகளை வைத்திருக்க இஸ்லாம் அனுமதி தருகிறது. ஆனால் பெண் அப்படி செய்ய முடியாது. ஒரு பொண் குழந்தையின் உடலை en:Female genital cutting மூலம் சிதைக்க அனுமதிக்கின்றது[பெண்ணும் ஆணும் தனியே பேசுவதை தடுக்கிறது. ஆணும் பெண்ணும் இணைந்து வழிபாடும் கூட செய்ய முடியாது[பெண் காதல் செய்தால் சில சமயம் இஸ்லாம்பெயரால் கொலையும் செய்யப்படுகிறது (en:Honor killing).


இஸ்லாமிய பெண்கள் விருந்தினர்களை உபசரிக்க கூட மற்ற ஆண்கள் முன்னால் வராதவாறு முடக்கப்படுகிறார்கள்.


இந்த கொள்கையுடைய இசுலாமிய வாதத்தினை கடவுள் மறுப்பாளர்கள் பகிரங்கமாகவே ஆதரிக்கிறார்கள்.இதற்காக இந்து மதத்திற்கு வக்காலத்து வாங்க முடியாது.அதிலும் கீழ்க்கண்ட சீர்கேடுகள் காணப்படுகின்றன.
இந்து சமயம் பெண்கள் பல கொடுமைகளுக்கு ஆளாவதை அனுமதிக்கிறது. உடன் கட்டை ஏறுதல் முற்காலத்தில் வற்புறுத்தப்பட்டது. பெண் குழந்தை வெறுக்கப்பட்டது.[9] குழந்தைத் திருமணம் பரிந்துரைக்கப்பட்டது.[10] பெண்ணை வன்முறைக்கு உட்படுத்த அனுமதித்தது.[11] பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று ஆணித்தரமாய் கூறுகின்றது.[12]

ஆனால் தற்போதைய இரு பாலரும் பொருளீட்டும் காலகட்டத்தில் இந்து சமயத்தில் பெண்களை முடக்குவது மற்ற சமயங்களை காட்டிலும் குறைந்துள்ளது.


இறைமறுப்பு கொள்கை கொண்ட அரசுகள் பல பத்து மில்லியன் மக்களை கொலைசெய்துள்ளன. சோவியத் யூனியனியனில் 60 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பாடர்கள் (). கம்போடியாவில் 2 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் ). சீனா, வட கொரியா போன்ற நாடுகள் பாரிய மனித உரிமை மீறல்களுக்கா குற்றம்சாட்டப்பட்டுள்ளன. இந்த எல்லா நாடுகளும் சர்வதிகார ஆட்சியைக் கொண்டவை. இதுவரைக்கும் இறைமறுப்பு அரச கொள்கையாக அறிவிக்கப்பட்ட நாடுகளில் எல்லாம் சர்வதிகாரமே தோன்றியுள்ளது.


ஆத்திகம் பேசும் மதவாதிகளுக்கிடையில் இறைமறுப்பு எனும் கொள்கையை புது மதமாக கீழே உள்ளபவர்கள் வளர்த்தெடுத்து வருகிறார்கள்.
ஈ.வெ.ரா. பெரியார் சி. என். அண்ணாத்துரை மு. கருணாநிதி 'நாத்திகம்' பி. இராமசாமி 'குத்தூசி' குருசாமி எம். ஆர். ராதா பழ. நெடுமாறன் சுப. வீரபாண்டியன் கி. வீரமணி கொளத்தூர் மணி சீமான் மா. நன்னன் சத்யராஜ் கமலகாசன் பாலமுருகன்


திராவிடம் புறக்கணிக்கப்படுவதாகவும்,பார்ப்பனீயம் கோலோச்சுவதாகவும் இவர்கள் வாதம் செய்கிறார்கள். அதிகமாக பிற புத்தகங்கள் படிப்பது ,பேச்சுகளை கேட்பது போன்றவற்றின் காரணத்தினால் இந்து மதத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள் .ஆனால் இவர்கள் குறிப்பிட்ட புத்தகங்களை மட்டும் படிக்க தூண்டப்படுகிறார்கள்


ஆனால் இந்த பிரிவினர் தற்போது ,புதிய மதமாகவே அடையாளம் காணப்படுகிறார்கள்.


பெரியார் கூறிய கொள்கைகள் தனிமனித சுதந்திரத்தையும், தனித்தன்மை மேம்பாடு செய்வது பற்றியும்,அடிமைத்தளை களைவது பற்றியும் இருந்தன. ஆனால் இவர்கள் பணத்துக்காக பிழைப்பு நடத்தும் சில தலைவர்கள்(இவர்களுக்கு)ளையும் பின்பற்றுபவர்கள்.பெரியார் கூறியதை போல சுயசிந்தனை உடையவர்கள் இந்த அமைப்புகளில் குறைவு.


கடவுள் மறுப்பை சொன்னவருக்கே சிலை வைத்து ,அவரியாயே கடவுளாக்கி மாலை போடுகிறார்கள்.... பாவம் பெரியார் இப்படியெல்லாம் நடக்கும் என தெரிந்திருந்தால் இவர்களுக்கு இன்னும் கொஞ்சம் தெளிவாகவே போதனை செய்திருக்க கூடும்.

4 comments:

 1. //உருவ வழிபாட்டைப்பற்றி பேசிய பெரியாரையே கடவுளாக்கி இவர்கள் புது மதமாக மதம் பிடித்து அலைகிறார்கள்.//
  இந்த முதல் வரி மட்டுமே சரி

  //மூட நம்பிக்கைகளுக்கு எதிராக இருப்பதாக கூறிக்கொள்ளும் இவர்கள் இஸ்லாமிய,கிறித்துவ மூடநம்பிக்கைகளை பற்றி பேச தொடை நடுங்குகிறார்கள்.//

  இஸ்லாதிலும் கிறித்துவதிலும் உள்ளமூடநம்பிக்கையை உங்களால் பட்டியல் இட முடியுமா?
  // இஸ்லாமியாயவாதிகளுடன் சேர்ந்து கொண்டு சண்டைபோட்டு பொது வாழ்வின் அமைதியை சீற்குளைக்கிறார்கள்.//

  என்னங்ணா இது கட்டு கதை

  //இந்து மக்களை மட்டுமே சாடுகிறார்கள் . இது அவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் அல்ல இந்து எதிர்ப்பாளர்கள் என்பதை தோலுரித்து காட்டுகிறது.//

  அவனவன் அவன் வீட்டை தான் முதலில் சுத்தம் செய்யவேண்டும் இந்துக்கலுக்கு தி.க என்றால் முஸ்லிம்களுக்கு டி.என்.டி.ஜெ (த.நா.த.ஜ)

  உங்கள் பங்குக்கு நீங்களும் கொஞ்ஞம் சொறிந்துகொள்ளுங்கள்

  ReplyDelete
 2. வாங்க ராஜவம்சம்! வருகைக்கு நன்றி..!

  இஸ்லாத்திலும் கிறித்துவத்திலும் உள்ள மூடநம்பிக்கைகளை பட்டியலிட முடியுமா என்ற கேள்வி மூலம் நீங்கள் அந்த வழிமுறைகளை பற்றி இன்னும் அறிந்து கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது,மேற்படி மதங்களின் மூடநம்பிக்கைகளை பக்கம் பக்கமாய் பட்டியலிடலாம்,வாசிப்பிளிருக்கிறேன் விரைவில் பதிவிடுகிறேன்.
  இஸ்லாமியாயவாதிகளுடன் சேர்ந்து கொண்டு சண்டைபோட்டு பொது வாழ்வின் அமைதியை சீற்குளைக்கிறார்கள் என்பதை கட்டுக்கதை என்று கூறுகிறீர்கள்,நீங்கள் தமிழ்நாட்டில் நடக்கும் இந்த அக்கிரமத்தை பார்க்க வில்லையா அல்லது அப்படி நடக்கவில்லை என்று வக்காலத்து வாங்குகிறீர்களா?

  அவனவன் வீட்டை மட்டும் சுத்தம் செய்பவன் எதற்கு மதச்சார்பின்மை என்று பேச வேண்டும், நேரடியாக இந்து மதத்தை மட்டும் சாடலாமே?

  அரிப்பெடுத்தவன் தான் சொரிய வேண்டும் எங்களுக்கு எந்த கொள்கையிலும் ஈடுபாடோ ,அதன் மீதான தாக்கங்களின் அறிப்புகளோ கிடையாது..
  ஆகவே ஒரு பார்க்கம் சார்ந்து பேசும் அறிப்பெடுத்தவர்கள்..சொல்லாமல் சொரிந்துதான் ஆகா வேண்டும் என்பதை அறிவோம்..

  ஆக்க பூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கியிருக்கிறேன்..நன்றி

  ReplyDelete
 3. http://www.onlinepj.com/bayan-video/vivathangal/nathikarin_moodanambikai/

  ReplyDelete
 4. சகோதரரே நீங்கள் இஸ்லாத்தை பற்றி முறையாக அறியாததால்தான் இவ்வாறு எழுதியுள்ளீர்கள்.இஸ்லாத்தைப்பற்றி அறிய திருக்குரானையும்,நபிகள் நாயகம் ஸல் அவர்களின் ஹதீஸ் எனும் வாழ்க்கை நடைமுறையையும் பற்றி அறிந்தால் நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.இந்த லிங்க் மூலம் ஓரளவு அறியலாம்.முயன்று பாருங்களேன்.நன்றி

  http://www.readislam.net/index.shtml
  http://whyislam.org/

  ReplyDelete